Tuesday, December 21, 2010

புகைப்பட கலைஞனின் காதல் : கே.வி.ஆனந்த் பேட்டி


ரொம்ப நாளா என் மனசுக்குள் ஊறிக்கிடந்த ஒரு கதை... 'கோ'. ஜீவாவுக்கு இது செம
ஸ்டைல் சிக்ஸர் படம். எனக்கும் உற்சாக டானிக். ஹாரிஸ் ஜெயராஜ், ரிச்சர்ட் எம்.நாதன், சுபா, தயாரிப்பாளர் குமார்னு நல்ல டீம். 'அயன்' படத்தின் சாயல் துளியும் இல்லாமல், அடுத்த படம் எடுக்கிறதுதான், ஓர் இயக்குநரா எனக்கு அழகு!" - சுவாரஸ்யமாகப் பேசுகிறார்
டைரக்டர் கே.வி.ஆனந்த். சென்ற வருடத்தின் ஒரே சூப்பர் டூப்பர் ஹிட்டான 'அயன்' படைத்தவர்!


" 'அயன்' போதைக் கடத்தல் நெட்வொர்க்னு புதுசா இருந்தது. 'கோ'வில் அப்படி என்ன இருக்கும்?"

"போதைக் கடத்தல் கும்பல்னு ஒரு புள்ளியை வெச்சுக்கிட்டு, மெனக்கெட்டு விவரங்கள் தேடி அலைஞ்சோம். 10 நாள் தாடியோடு சர்வ சாதாரணமா, கோடிகளில் வியாபாரம் செய்கிற குருவிகளைப் பார்த்தபோது, ஆச்சர்யமா இருந்தது. பல தடவை ஜெயிலுக்குப் போய் அலுத்து, 'இதுதாங்க... இப்படித்தாங்க'ன்னு சில விஷயங்களைப் பிட்டுப் பிட்டுவெச்சாங்க. அதன் பின்னணியில் படம் பண்ணினபோது, எல்லோருக்கும் சுவாரஸ்யமா இருந்தது. எனக்கு ஆரம்பத்தில் பிரஸ் போட்டோகிராஃபர் ஆகணும்னு ஆசை. ஒரு பெரிய பத்திரிகையின் நேர்காணலில் கடைசி வரை போய்... தேர்வாகலை. அதுக்கப்புறம் 'வீக்லி', 'இந்தியா டுடே'ன்னு படம் எடுத்துக் கொடுத்திருக்கேன். ஆனாலும், 'பிரஸ் போட்டோகிராஃபர்' வேலை என் நிறைவேறாத பெரும் கனவு. இப்ப கொஞ்சம் காசு பணம் பார்த்திருக்கலாம். ஆனா, அப்படி ஒரு கனவு நிறைவேறலையேன்னு நெனப்பு மனசுக்குள் இருக்கு. இப்ப 'கோ' படத்துக்காக ஜீவாவை பிரஸ் போட்டோகிராஃபர் ஆக்கிட்டேன். எனக்குத் தெரிந்த அனுபவம், மற்றவருக்கு நேர்ந்த விஷயங்கள்னு ஒரு பரபரப்பான தினசரிப் பத்திரிகையில் எப்படி வேலை நடக்கும்... போட்டோகிராஃபருக்கும், நிருபருக்கும் இருக்கிற தொடர்பு என்ன, எவ்வளவு நெருக்கடி, அதுக்குள்ளே இருக்கிற அவசரம், போட்டி, அதிவேகமாக் கொண்டுபோய் சேர்க்கிற செய்திகள்னு அவ்வளவா வெளியே தெரியாத ஒரு கதைக் களம் இருக்கு. நிச்சயம் 'கோ' கொண்டாடப்படும்!"


"சிம்பு இடத்தில் ஜீவா. எப்படி?" 

"சூப்பர். 'இதுதாங்க கதை'ன்னு ஆரம்பிக்கிற முன்னாடியே 'உங்களைத் தெரியும் சார்'னு சொல்லி எழுந்தவர் ஜீவா. அவருடைய கேரியர் கிராஃபில் சில படங்கள் ரொம்ப முக்கியமானவை. 'ராம்', 'ஈ', 'கற்றது தமிழ்' போன்ற படங்களில் அவர் 'டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்'னு புரியும். அவரை சரியாகக் கையாண்டால், எங்கோ போய் நிற்பார். தன்னை முழுதாக ஒப்படைக்கிற மனசு இருக்கு. ரொம்ப முக்கியமா... ஈகோ இல்லை. அதனால், ஜீவா இன்னும் பெரிய இடத்துக்கு வருவார்!""ராதா வாரிசு கார்த்திகா உங்க எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுறாங்களா?" 
"இன்னிக்கும் கார்த்திகாவுக்குத் துணையா, ராதா வருவாங்க. எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். என்னென்ன கெடுபிடிகள் பண்ணலாம். ம்ஹ§ம்... கார்த்திகாவை எங்க பொறுப்பில் விட்டுட்டு, தனியாப் போய் உட்கார்ந்துடுவாங்க. நார்வேயில் எலும்புகளை உறையவைக்கும் குளிர். செங்குத்தான பனிமலை. உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு... அழகா, ரசனையாக் காதலிக்கணும். கார்த்திகாவிடம் முகச்சுளிப்பே இல்லை. பரதநாட்டியத்தை முழுமூச்சில் கத்துக் கொடுத்திருப்பாங்க போல. அசைவுகளில் அவ்வளவு வசீகரம். கேமரா வியூ ஃபைண்டரில் எட்டிப்பார்த்தால், 'அடடா!'ன்னு இருக்கு!"


"உண்மை சொல்லுங்க... கடைசி நேரத்தில் சிம்புவை மாற்றியது ஏன்?"
"நான் பி.சி.ஸ்ரீராம், பிரியதர்ஷன், ஷங்கர், ராஜ்குமார் சந்தோஷின்னு பெரிய ஆட்களிடம் வேலை பார்த்தவன். இவங்கள்லாம் கதைக்குத்தான் படம் பண்ணுவாங்க. ஹீரோவுக்காகப் படம் பண்றது இல்லை. நான் ஒரு டைரக்டரா நடந்துக்கணும்னு பார்த்தேன்... 


No comments:

Post a Comment